கோவை வடவள்ளி, கவுண்டம்பாளையம், வீரகேரளத்திற்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் நடைபெற்றுவரும் மேம்பாலம் பணிகளால், கவுண்டம்பாளையம், வடவள்ளி மற்றும் வீரகேரளம் பகுதிகளுக்கு 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.



கோவை: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்படும் கவுண்டம்பாளையம், வடவள்ளி மற்றும் வீரகேரளம் கூட்டு குடிநீர் திட்டத்தில் இந்தப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பெரியநாயக்கன்பாளையம் மேம்பால பணிக்காக குடிநீர்க் குழாய்கள் மாற்றப்பட்டு, இணைப்பு பணிகள் வரும் ஜன.21 மற்றும் ஜன.22 ஆகிய இரண்டு நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதனால், இத்திட்டத்தின் கீழ் பயன் பெறும் கோவை மாநகராட்சியின் கவுண்டம்பாளையம், வடவள்ளி மற்றும் வீரகேரளம் பகுதிகளுக்கு இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குழாய் இணைப்புப் பணிகள் முடிக்கப்பட்டு வரும் 23ஆம் தேதி காலை முதல் வழக்கம்போல் குடிநீர் வினியோகம் செயல்பாட்டுக்குவரும் என குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும், உள்ளாட்சி நிறுவனங்களுக்கும், பொது மக்களுக்கும் தங்கள் உள்ளூர் நீர் ஆதாரங்கள் மூலமாக 2 நாட்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ளுமாறு கோவை மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...