கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள கோவனூர் அருகே ஒற்றை காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி உயிரிழப்பு. ஒருவர் படுகாயம்.
கோவை: கோவனூர் அருகே உள்ள மலைகோவிலுக்கு சென்ற தொழிலாளியை, ஒற்றை யானை தாக்கியதில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சிக்குப்பட்ட கோவனூர் அருகேயுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதி மலைக்கோவிலுக்குக் காலை 7 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த சவுந்தரராஜன் என்பவர் சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த ஒற்றை காட்டு யானை சவுந்தரராஜனைத் தாக்கியுள்ளது. இதில் கை முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காகக் கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் திருமாளூரை சேர்ந்த மயில்சாமி என்பவர் ஆடுகளுக்கு இலை பறிக்க கோவனூர் பகுதிக்கு இன்று மாலை 5 மணியளவில் சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த ஒற்றை யானை மயில்சாமியைத் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து யானை சென்ற பின் அங்கிருந்த நபர்கள் மயில்சாமி உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த பெரியநாயக்கன்பாளையம் சரக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.