தாராபுரத்தில் பட்டப்பகலில் இருசக்கர வாகனம் திருட்டு - சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பொள்ளாச்சி செல்லும் சாலையில் ஆர்.கே.எஸ். டிவிஎஸ் ஷோரூம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் வசித்து வருபவர் கார்த்திகேயன். இவரது தாயார் கண்ணம்மாள். இவர் ஆர்.கே.எஸ் ஷோரூம்- ல் சமையல் வேலை செய்துகொண்டு அங்கேயே தங்கியும் வருகிறார்.

இந்த நிலையில், கண்ணம்மாள், அவரது மகன் கார்த்திகேயன் மதியம் ஒரு மணி அளவில் மதிய உணவு அருந்துவதற்காக தனது இரு சக்கர வாகனத்தை ஆர்.கே.எஸ் ஷோரூம் முன்பு நிறுத்திவிட்டு உணவு அருந்த சென்றுவிட்டார்.



மாலை 4 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தை எடுப்பதற்காக வந்து பார்த்தபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. மேலும், சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த நபர் ஒருவர், கார்த்திகேயனுக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை லாவகமாக திருடி சென்றது அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

பட்டப்பகலில் இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்திருடிச் செல்லும் இந்த சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...