திருப்பூர் தாராபுரத்தில் 2 நாள் மஞ்சுவிரட்டு - வீரர்கள், காளைகளுக்கு பரிசு வழங்கி பாராட்டு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகில் உள்ள தளவாய்பட்டினத்தில் இரண்டு நாள் மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது. வெற்றிபெற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.



திருப்பூர்: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, தாராபுரம் பகுதியில் கடந்த 100 வருடங்களாக மஞ்சுவிரட்டு விழா ஜன.17 மற்றும் ஜன.18 ஆகிய 2 நாட்களாக வெகுவிமர்சியாக நடைபெற்றது. இதில், மஞ்சுவிரட்டு குழுவினர் மற்றும் தளவாய்பட்டிணம் ஊர் பொதுமக்கள் சார்பில் குழுவின் தலைவர் சேகர் தலைமையில் இந்த போட்டி நடைபெற்றது.



அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு இரண்டு அதற்கு மேல் உள்ள மாடுகளுக்கு மட்டும் போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. மாடுபிடி வீரர்கள் வால் கொம்பு பிடிக்க அனுமதிக்கப்படவில்லை. மாட்டின் கொம்புகள் கூர்மையாக இருந்தால் அனுமதி மறுக்கப்பட்டது. மஞ்சுவிரட்டில் கலந்துகொள்ளும் வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர் இரண்டு நாட்களுக்கு முன்பே பதிவு செய்து விழாவில் அனுமதிக்கப்பட்டனர். மது அருந்தியவர்கள் மஞ்சுவிரட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.



தாராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தளவாய் பட்டினம், செலாம்பாளையம், கள்ளிவலசு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து 100க்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மேலும், ஜனவரி 18-ஆம் தேதி நடைபெற்ற மஞ்சுவிரட்டு விழாவில் திருப்பூர், கரூர், திண்டுக்கல், ஈரோடு, கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 100க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் பங்குபெற்றனர்.



மேலும், மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் காளைகள் முட்டியதில் மூன்று பேர் லேசான காயமடைந்தனர். போட்டியில் பங்கேற்ற சில காளைகள் பாய்ந்து வந்து வீரர்களை விரட்டியடித்துடன், அங்கும் இங்குமாக திரும்பி வேடிக்கை காண்பித்தன.



காளைகளின் திமிலை பிடித்து அடக்கிய வீரர்களுக்கும் பிடிபடாத காளைகளுக்கும் எல்.சி.டி டிவி, பிரிட்ஜ், சைக்கிள், பாத்திரங்கள் மற்றும் வெள்ளிக்காசுகள் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் விழாக் குழுவின் சார்பில் வழங்கப்பட்டன.

காயமடைந்த வீரர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மூலம் உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது. விழாவையொட்டி, தாராபுரம் துணை கண்காணிப்பாளர் தனராசு காவல் ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...