தாராபுரத்தில் சிலம்பம் சுற்றி அசத்திய மாணவ-மாணவியர் - பார்வையாளர்கள் உற்சாகம்!

பொங்கல் பண்டிகையை ஒட்டி திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரத்தில் சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சிலம்பம் சுற்றினர்.


திருப்பூர்: பாரம்பரிய வீர விளையாட்டுக்களில் ஒன்று சிலம்பம். பல நூறு ஆண்டுகள் பழமையான இந்த விளையாட்டை ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்று வருகின்றனர். இந்நிலையில், தமிழர்களின் மரபுக் கலைகளில் ஒன்றாக போற்றி பாதுகாக்கப்பட்டு வரும் சிலம்பாட்டம், தற்காப்பு கலையாக இருப்பதுடன், உடல் மற்றும் மன நலனுக்கு உத்வேகம் அளிக்கும் உகந்த சிறப்பான கலையாக திகழ்கிறது.

இந்தக் கலையை சிறியவர் முதல் பெரியவர் வரை வயது பேதம் இன்றி அனைவரும் கற்றுக்கொண்டு உடல் மற்றும் மன நலனை பேணி காப்பது இன்றைய வாழ்வியலுக்கு மிகவும் அவசியமாக உள்ளது.



அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி சிலம்பு தற்காப்பு கலை செயல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீ மதுரை வீரன் சிலம்பு பயிற்சி கூடத்தில் 46 வது ஆண்டாக நடைபெற்ற இந்த விழாவில், இந்திய ஆர்ட்ஸின் சிலம்பம் தற்காப்பு கலை செயல் விளக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. தாராபுரம் புது காவல் நிலைய வீதியில் முருகன் கோவில் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சிலம்பு பயிற்சியாளர் மோகன் தலைமையேற்று நடத்தினர்.



இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். சிலம்பம் சுற்றியும், தீபம் சுற்றியும், கத்திச்சண்டை போட்டும் மாணவ-மாணவியர் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...