கோவை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை தீவிரம் - 4,393 பேருக்கு சோதனை

கோவை விமானநிலையத்தில் ஜன.1ம் தேதி முதல் இதுவரை 4ஆயிரத்து 393 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.



கோவை: சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று அதிகரித்துவருகிறது. இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, கோவை பன்னாட்டு விமான நிலையத்துக்குவரும் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனைகள் செய்யப்பட்டு ரேண்டம் அடிப்படையில் 2 சதவீதம் பயணிகளிடம் இருந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன.

கோவை விமான நிலையத்துக்கு சிங்கப்பூா், ஷாா்ஜா ஆகிய பகுதிகளில் இருந்து வரும் விமானப் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது. ஷாா்ஜாவில் இருந்து ஜனவரி 16-ந் தேதி கோவை விமான நிலையம் வந்த பயணிகளில் ரேண்டம் அடிப்படையில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் நாமக்கல் மாவட்டம், காளப்பநாயக்கன்பட்டியைச் சோ்ந்த 38 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குறித்து, நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறையினருக்கு சம்பந்தப்பட்டவரின் விவரங்கள் கோவை மாவட்ட சுகாதாரத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதவிர, கோவை விமான நிலையத்தில் ஜனவரி 1-ந் தேதியில் இருந்து இதுவரை எடுக்கப்பட்ட பரிசோதனையில், இதுவரை 3 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து கோவை சுகாதாரத் துறை துணை இயக்குநா் அருணா கூறியதாவது:-

கோவை விமான நிலையத்தில் கடந்த ஜனவரி 1-ந் தேதியில் இருந்து இதுவரை 4,393 பேருக்கு காய்ச்சல் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், 148 பேரிடம் இருந்து ரேண்டம் அடிப்படையில் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவா்களில் கோவை, திருப்பூா் மற்றும் நாமக்கல் மாவட்டங்களை சோ்ந்த தலா ஒருவா் வீதம் 3 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் கடந்த டிசம்பா் மாதத்தில் இருந்து பரிசோதனை செய்யப்பட்டதில் 6 பேருக்கு மட்டுமே கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், கோவை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் 3 போ், சேலம், நாமக்கல் மற்றும் திருப்பூா் மாவட்டங்களை சோ்ந்த தலா ஒருவா்.

இதில் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவரைத் தவிா்த்து மற்ற அனைவருக்கும் புதிய வகை கொரோன நோய்த் தொற்று பாதிப்பில்லை என்ற முடிவுகள் பெறப்பட்டுள்ளன. நாமக்கல்லை சோ்ந்தவரின் சளி மாதிரிகள் புதிய வகை கொரோனா நோய்த் தொற்று கண்டறிவதற்காக சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...