பன்றிக்காய்ச்சல் காரணமாக அண்ணன்-தங்கைக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை


கோவையில் சமீப காலமாக பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் மதுக்கரை பகுதியை சேர்ந்த தண்டபாணி என்பவருக்கும் அவரது மனைவி மல்லிகாவுக்கும் பன்றிக்காய்ச்சல் இருப்பது அறியபட்டு இருவரும் மதுக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். 

இந்த நிலையில், அவர்களது மகன் சந்தான கிருஷ்ணன் (27) மற்றும் மகள் மரகதம் (25) ஆகியோருக்கு கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் தொடர்பாக பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, இருவரும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டது  தெரியவந்தது. தொடர்ந்து, அண்ணன் தங்கை இருவருக்கும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பன்றிக்காய்ச்சலுக்கு தாய், தந்தை மரணமடைந்த நேரத்தில், அவர்கள் பிள்ளைகளுக்கும் பன்றிக்காய்ச்சல் தொற்று இருப்பதையறிந்த மதுக்கரை பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...