திருப்பூர் தாராபுரம் அருகே மஞ்சுவிரட்டு போட்டி: காளைகளை வீறுகொண்டு அடக்கிய காளையர்கள்!

தாராபுரம் அடுத்த ராமபட்டினம் பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெற்ற 2ஆம் ஆண்டு மஞ்சுவிரட்டு போட்டியில் பங்கேற்ற 40 காளைகளில் 35 காளைகளை அடக்கிய வீரர்களுக்கு ரொக்கம் உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட ராமபட்டினம் கிராமத்தில் பொங்கல் திருவிழாவையொட்டி 2ஆம் ஆண்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

ஆர்.பி.எம் ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் நடைபெற்ற இந்த மஞ்சுவிரட்டு போட்டியில், ராமபட்டினம், காளிபாளையம், மேட்டு வலசு, சீராம் பாளையம், தாளக்கரை, காட்டூர், ஆற்றுக்கால் புதூர், கரையூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 40 க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் கலந்து கொண்டன.



இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் ஒவ்வொரு மாடுகளையும் அடக்குவதற்கு 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. மாடுகளை அடக்குவதற்கு 9 பேர் கொண்ட குழுவினருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த போட்டியில் 5 மாடுகளை தவிர மற்ற 35 மாடுகளை வீரர்கள் அடக்கினர்.



இந்நிலையில், மாடுகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் ரொக்க பணம் மற்றும் அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் பொதுமக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் வழங்கப்பட்டது.

இதில் ஆர்பிஎம் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் சேகர் தலைமையில், துணைத் தலைவர் கார்த்திக் கண்ணன். செயலாளர் மலர்வண்ணன். பொருளாளர் கோபிநாத். ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...