பல்லடம் அருகே சித்தம்பலத்தில் சனீஸ்வர பகவானுக்குச் சிறப்பு அபிஷேக பூஜை

பல்லடம் அருகே சித்தம்பலத்தில் இரண்டரை வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சனீஸ்வர பகவானுக்குச் சிறப்பு அபிஷேக பூஜை.



திருப்பூர்: பல்லடம் அருகே சித்தம்பலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோளாறு நவகிரக கோட்டை ஸ்தலத்தில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்புப் பூஜை நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சித்தம்பலத்தில் பிரசித்தி பெற்ற கோளாறு நவகிரக கோட்டை ஸ்தலம் உள்ளது.



இங்கு ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனியாகச் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

இரண்டரை வருடத்திற்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி திருக்கணித பஞ்சாகப்படி இன்று சனீஸ்வர பகவான் மகரம் ராசியிலிருந்து கும்பம் ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார்.



இதனையடுத்து கோளாறுபதி நவகிரக கோட்டையில் சனீஸ்வரன் பகவானுக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை பூஜைகள் நடைபெற்றன. மேலும் பக்தர்கள் முன்னிலையில் வேள்வி யாகங்கள் நடத்தப்பட்டன.



சிறப்புப் பூஜையில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அங்கு வந்த பக்தர்கள் சிறப்புப் பரிகார பூஜையில் கலந்து கொண்டு எள் தீபம் ஏற்றி சனீஸ்வர பகவானை வழிபாடு செய்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...