உடுமலையில் ஓபிஸ் அணி சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106-வது பிறந்தநாளை ஒட்டி உடுமலையில் அதிமுக ஓபிஸ் அணி சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.


திருப்பூர்: உடுமலையில் அதிமுக ஓபிஸ் அணி சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.



திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு ஓபிஸ் அணி சார்பில் எம்ஜிஆரின் 106ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட திருவுருவப் படத்திற்கு நகரச் செயலாளர் யூ.ஜி.கே சற்குணசாமி தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.



மேலும் இந்த நிகழ்வில் திருப்பூர் புற நகர் மாவட்டச் செயலாளர் காமராஜ் கலந்து கொண்டு 100-க்கும் மேற்பட்ட ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



இந்நிகழ்வில், மாவட்ட அவைத் தலைவர் வெங்கடுபதி, மாவட்ட இணைச்செயலாளர் கிருஷ்ணம்மாள், திருப்பூர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்ஜிஆர் என்கிற பாலகிருஷ்ணன், குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் நாகராஜ், பொதுக்குழு உறுப்பினர் ராஜபிரகாஷ், நகர நிர்வாகிகள் அஞ்சலி, லைன் நடராஜ், ஜெயசீலன், ஜாபர், அருண் கார்த்திக் உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...