வால்பாறையில் குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை - பரபரப்பு சிசிடிவி வீடியோ

கோவை மாவட்டம், வால்பாறை குடியிருப்பு பகுதிக்கு நுழைந்த சிறுத்தை பூனையே கொன்று தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சி வேகமாக பரவி வருகிறது.



கோவை: வால்பாறை குடியிருப்பு பகுதிக்கு நுழைந்த சிறுத்தை பூனையே கொன்று தூக்கிச் செல்லும் வீடியோ வெளியாகி பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.



கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்ட அதிகரித்து வருகிறது. யானை, புலி, சிறுத்தை,காட்டெருமை கரடி போன்ற வனவிலங்குகள் குடியிருப்பு பகுதியில் வந்து செல்கின்றன.

சிறுத்தை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீட்டில் வளர்க்கும் நாய், கோழி, பூனை, ஆடு, போன்றவைகளை வேட்டையாடி செல்கின்றது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் வால்பாறை கூட்டுறவு காலனி பகுதியில் அமரேஷ் என்பவர் வீட்டில் வளர்த்த பூனை இரண்டு நாளாகக் காணவில்லை என்று அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர்.



அருகே உள்ள வீட்டில் பொருத்திய சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்த்து உள்ளனர். சிறுத்தை ஒன்று வீட்டிற்குள் வந்து பூனையைக் கொன்று தூக்கிச் செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிக்குள் உலாவி வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...