கோவை அருகே மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் கணவர் தற்கொலை!

கோவை இடையர்பாளையம் அருகே குடும்ப பிரச்சினையில் மனைவி பிரிந்து சென்ற நிலையில், விரக்தியில் இருந்த கணவர் வீடு தெளிக்க பயன்படுத்தப்படும் மஞ்சள் சாயத்தை குடித்து தற்கொலை.


கோவை: கோவை மாவட்டம் காங்கேயம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அழகேஸ்வரன். இவரது மனைவி கவிதா. கூலித் தொழிலாளியான அழகேஸ்வரன் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, மனைவி கவிதா அழகேஸ்வரனிடம் இருந்து பிரிந்து சென்று அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இதன் காரணமாக விரக்தியில் இருந்து வந்த அழகேஸ்வரன், நேற்றைய தினம் (15.01.2023) தனது வீட்டில் வீடு தெளிக்க பயன்படுத்தப்படும் மஞ்சள் சாயத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து அங்கு சென்ற துடியலூர் காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் கணவர் வீடு தெளிக்க பயன்படுத்தப்படும் மஞ்சள் சாயத்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...