'விஸ்கோஸ் செயற்கை இழைக்கு குவிப்பு வரி வேண்டாம்..!' - மத்திய அரசுக்கு கோவை ஜவுளித்துறையினர் கடிதம்!

பஞ்சு விலையில் நிலையற்ற தன்மை நிலவும் சூழ்நிலையில் விஸ்கோஸ் செயற்கை இழை மீது குவிப்பு வரி விதித்தால் இந்திய ஜவுளித்தொழில் கடுமையாக பாதிக்கும் என மத்திய நிதி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர்களுக்கு ஜவுளித்தொழில் துறையினர் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.


கோவை: பஞ்சை பிரதான மூலப்பொருளாக கொண்டு செயல்படும் இந்திய ஜவுளித்தொழில் அதன் விலையில் நிலவும் நிலையற்ற தன்மையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விஸ்கோஸ் செயற்கை இழை ஜவுளித்துறையினருக்கு உதவி வருகிறது. இறக்குமதி செய்யப்படும் செயற்கை இழைக்கு குவிப்பு வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவ்வாறு செய்தால் இந்திய ஜவுளித்தொழில் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மறுசுழற்சி ஜவுளித்தொழில்கள் கூட்டமைப்பின்(ஆர்டிஎப்) தலைவர் ஜெயபாலிடம் கேட்டபோது,

செயற்கை இழை என்பது பாலியஸ்டர் மற்றும் விஸ்கோஸ் என இரண்டு வகைப்படும். பஞ்சு விலை கடுமையாக உயர்வதும் அதற்கு பின் குறைவதும் என நிலையற்ற தன்மை காணப்படுகிறது. இதனால் நூற்பாலைகளில் விஸ்கோஸ் செயற்கை இழை சிறிதளவு பஞ்சுடன் கலந்து நூல் தயாரிக்கப்படுகிறது.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விஸ்கோஸ் செயற்கை இழைக்கு குவிப்பு வரி விதிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்தால் இந்திய ஜவுளித்தொழில் மிக கடுமையாக பாதிக்கப்படும்.

சர்வதேச சந்தையில் போட்டியிட முடியாத சூழல் ஏற்படும். இந்தியாவில் ஒரே ஒரு தனியார் நிறுவனம் தான் விஸ்கோஸ் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குவிப்பு வரி விதிக்கப்பட்டால் அந்த ஒரு நிறுவனம் மட்டுமே மிகுந்த பயன்பெறும். இது ஏற்புடையதல்ல.

இது தொடர்பான விவரங்கள் அனைத்தையும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ்கோயலிடம் கோரிக்கை மனுவாக அனுப்பியுள்ளோம், என்றார்.

மேலும், தமிழ்நாடு ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்கத்தின்(ஓஸ்மா) தலைவர் அருள்மொழியிடம் கேட்டபோது,



“இந்திய பஞ்சு விலை சர்வதேச பஞ்சு விலையை விட கூடுதலாக உள்ளது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக விஸ்கோஸ் செயற்கை இழை விலை மட்டுமே சர்வதேச விலைக்கு நிகராக உள்ளது. நூற்பாலைகளில் நூல் உற்பத்திக்கு செயற்கைஇழை சிறிதளவு சேர்த்து பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் இறக்குமதி செய்யப்படும் விஸ்கோஸ் செயற்கைஇழைக்கு குவிப்பு வரி விதித்தால் இந்திய ஜவுளித்தொழில் கடுமையாக பாதிக்கப்படும்.

ஏற்கெனவே பஞ்சுக்கு 11 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளதால் ஜவுளித்தொழில் நெருக்கடியில் உள்ளது. தற்போது இறக்குமதி செய்யப்படும் விஸ்கோஸ் செயற்கை இழைக்கும் குவிப்பு வரி விதித்தால் நெருக்கடி மேலும் அதிகரிக்கும்” என்றார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...