பெங்களூரில் 112 அடி உயர ஆதியோகி சிலை நாளை திறப்பு - கோவை ஈஷா தகவல்

பெங்களூரு அடுத்த சிக்கபல்லாபுரத்தில் ஈஷா சார்பில் அமைக்கப்பட்ட 112 அடி உயர ஆதியோகி சிலை திறப்பு விழாவில் குடியரசு துணை தலைவர் மற்றும் கர்நாடக முதல்வர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.


கோவை: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 112 அடி உயரத்திலான ஆதியோகி சிலையை நாளை குடியரசு துணை தலைவர் ஜகதீப் தங்கர் திறந்து வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈஷா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:



கோவை ஈஷா யோகா மையத்தில்‌ அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஆதியோகி திருவுருவத்தை போன்று, பெங்களூரு அருகே உள்ள சிக்கபல்லாபுரத்தில்‌ 112 அடியில்‌ ஆதியோகி திருவுருவம்‌ ஜனவரி 15-ம்‌ தேதி திறக்கப்பட உள்ளது.



மகர சங்கராந்தி தினமான நாளை (ஜனவரி 15)‌ சத்குரு முன்னிலையில்‌ நடைபெறும்‌ இந்த விழாவில்‌, துணை குடியரசு தலைவர்‌ ஜகதீப்‌ தன்கர்‌ கலந்து கொண்டு,‌ ஆதியோகி திருவுருவத்தை திறந்து வைக்க உள்ளார்‌.

இந்த விழாவில்‌ கர்நாடக மாநில ஆளுநர்‌ தவார்‌ சந்த்‌ கெலாட்‌, கர்நாடக முதலமைச்சர்‌ பசவராஜ்‌ பொம்மை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விருந்தினர்கள்‌ பங்கேற்க உள்ளனர்‌.

இந்த பிரமாண்ட விழாவில்‌ சுற்றுவட்டார கிராம மக்கள்‌ உட்பட ஆயிரக்கணக்கான மக்கள்‌ கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறப்பு விழாவின்‌ ஒரு பகுதியாக, ஆதியோகி சப்த ரிஷிகளுக்கு யோக விஞ்ஞானத்தை பரிமாறிய வரலாற்றை 3டி ஒளி, ஒலி காட்சியாக விவரிக்கும்‌ கண்ணை கவரும்‌ ஆதியோகி திவ்ய தரிசனம்‌ நிகழ்ச்சியும்‌ நடைபெற உள்ளது.

மேலும்‌, ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள்‌ மற்றும்‌ சவுண்ட்ஸ்‌ ஆப்‌ ஈஷா குழுவினரின்‌ கலை நிகழ்ச்சிகளும்‌ நடைபெறும்‌. இவ்விழாவை சத்குரு செயலி மற்றும்‌ சத்குரு யூடியூப்‌ சேனல்‌, பேஸ்புக்‌ மற்றும்‌ இன்ஸ்டாகிராம்‌ சேனல்களில்‌ நேரலையில்‌ காணலாம்‌.

முன்னதாக, ஆதியோகிக்கு முன்பாக, சக்திவாய்ந்த யோகேஸ்வர லிங்கத்தை சத்குரு பிரதிஷ்டை செய்ய உள்ளார்‌. இதனிடையே கடந்த அக்டோபர்‌ மாதம்‌ அங்கு நாக பிரதிஷ்டை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மக்களின்‌ ஆன்மீக வளர்ச்சிக்காக சிக்கபல்லாபுரத்தில்‌ உருவாக்கப்பட்டுள்ள சத்குரு சந்நிதியில்‌, ஆதியோகி மட்டுமின்றி, கோவை ஈஷா யோகா மையத்தில்‌ இருப்பதை போன்று லிங்க பைரவி, இரண்டு தீர்த்த குண்டங்கள்‌, ஈஷா சம்ஸ்கிரிதி பள்ளி, ஈஷா ஹோம்‌ ஸ்கூல்‌, ஈஷா லீடர்ஷிப்‌ அகாடமி ஆகிய கட்டமைப்புகளும்‌ படிப்படியாக உருவாக்கப்பட உள்ளன.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...