பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா

கோவை பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரி வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.


கோவை: கோவை பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரி வளாகத்தில் பல் சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் மற்றும் மத நல்லிணக்க விழா நடைபெற்றது.



இந்த விழாவில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.



அப்பொழுது அவர் பேசியதாவது, எல்லா சமயத்தவரும் ஒன்று சேர்ந்து சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பொங்கல் விழா கொண்டாடியது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

இந்த அரங்கத்தில் பல்வேறு சமயம் சார்ந்த மக்கள் அமர்ந்திருப்பதை, பார்க்கும்போது இந்தியாவில் சிறப்பு இயலாகும்.இங்குப் பயிலும் மாணவ, மாணவிகள் வருங்காலத்தில் பட்டம் பெற்று ஒரு சிறந்த அதிகாரிகளாகவும், அரசியல்வாதிகளாகவும், சிறந்த வல்லுநர்களாகவும், மருத்துவராகவும், வருவதற்கு முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.



இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சமூக சேவையில் ஈடுபட்ட சமூக பிரமுகர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.



மேலும் பொங்கல் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளையும், கல்வி ஊக்கத்தொகையும் காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் வழங்கினார்.



இந்த நிகழ்ச்சியில் பல் சமய நல்லுற இயக்கத்தின் தலைவர் ஹாஜி ஜெ. முகமது ரஃபி, ஒருங்கிணைப்பாளர் எம் எம் ராமசாமி, பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரியின் தலைவர் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கோவை சுன்னத் ஜமாத் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ஹாஜி எம் எ இணையத்துல்லா, மறை மாவட்ட முதன்மை குரு தூய மைக்கல் அதிதூதர் பேராலய அருள் தந்தை ஜார்ஜ் தனசேகர், ஜமாத்துல் உலமா சபை நிர்வாகிகள் மௌலவி அப்துல் ரஹீம் இந்தாதி, மௌலவி அப்துல் மாலிக் சிராஜி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...