கோவையில் வெளிநாட்டில் மருத்துவம் படிக்க விசா கிடைக்காத விரக்தியில் இளைஞர் தற்கொலை

கோவை தொப்பம்பட்டியை சேர்ந்த ஹரிஹரன் என்ற இளைஞர், பிலிப்பைன்ஸ் சென்று மருத்துவ படிப்பை தொடர விசா கிடைக்காததால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் தொப்பம்பட்டி கணபதி கார்டன் பகுதியைச் சேர்ந்த தம்பதி கற்குவேல் அய்யணன்- ஹேமா. இவர்களது மகன் ஹரிஹரன்(21), பிலிப்பைன்ஸ் நாட்டில் எம்.டி. மருத்துவம் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

கொரோனா காரணமாக இந்தியா வந்த நிலையில், மீண்டும் பிலிப்பைன்ஸ் செல்ல விசாவிற்காக விண்ணப்பித்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், 3 மாதமாக விசா கிடைக்காததால், ஹரிஹரன் விரக்தியில் இருந்து வந்துள்ளார்.



இதனிடையே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஹரிஹரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த துடியலூர் போலீசார், ஹரிஹரன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவம் படிக்க வெளிநாடு செல்ல விசா கிடைக்காத விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...