கோவையில் பயங்கர ஆயுதங்களுடன் வீட்டை நோட்டமிடும் கும்பல் - வைரலாகும் சிசிடிவி காட்சி

கோவையில் பயங்கர ஆயுதங்களுடன் இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதியில் நுழைந்த மர்ம கும்பல் அங்குள்ள வீடுகளை நோட்டமிடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டத்தில்கருமத்தம்பட்டி, சங்கோதிபாளையம், செல்லப்பம்பாளையம் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள், தோட்டங்களுக்குள்தனியே இருக்கும் வீடுகளில் திருட முயற்சித்துள்ளனர்.



வீட்டின் கூறையின்மீது ஏறி ஓட்டை பிரித்து உள்ளே இறங்கவும் முயற்சித்துள்ளனர். அதுமட்டுமின்றி, அங்குள்ள வட மாநில நபரிடம் செல்போன்களையும் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்த கருமத்தம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்த நிலையில், மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித்திரிந்ததோடு, வீட்டின் கூறையின் மேல் ஏறி நோட்டம் விடும்சிசிடிவி காட்சிகள், கோவையில் உள்ள வாட்ஸ் அப் குழுக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து கருமத்தம்பட்டி மற்றும் சூலூர் காவல்துறையினர், 4 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...