கோவை வேளாண் பல்கலை.,யில் தேசிய தொழில் முனைவோர்‌ தினவிழா!

கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ தேசிய தொழில் முனைவோர்‌ தினவிழா நடைபெற்றது.


கோவை: நாடு முழுவதும் பிரதமர்‌ மோடியின் ஆலோசனைப்படி தேசிய துளிர்‌ நிறுவன வாரம்‌ ஜனவரி 10 முதல்‌ 16ஆம்‌ தேதி வரை ஒவ்வொரு வருடமும்‌ கொண்டாடப்படுகிறது. தொழில்‌ முனைவோர்களின்‌ பங்களிப்பு மற்றும்‌ சாதனைகளைக் கவுரவிக்கும்‌ நோக்கத்தோடு கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ உள்ள தொழில்நுட்ப வணிக காப்பகத்தில்‌ நேற்று துளிர்‌ நிறுவன தினம்‌ கொண்டாடப்பட்டது.

இந்திய வேளாண் ஆராய்ச்சி‌ குழுமத்தின்‌ துணை தலைமை இயக்குநர்‌ ஆர்.சி அகர்வால்‌ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்‌.



அப்போது பேசிய அவர், விவசாயம்‌ சார்ந்த துளிர்‌ நிறுவனங்களை ஊக்குவிப்பதில்‌ இந்திய வேளாண்‌ ஆராய்ச்சிக்‌ குழுமம்‌ முன்னோடியாகத் திகழ்கிறது.

வேளாண்‌ கல்வியில்‌ தொழில்‌ முனைவோருக்கான பாடத்திட்டத்தை அமல்படுத்துவதன்‌ மூலம்‌ வேளாண் மாணவர்கள்‌ அதிகளவில்‌ தொழில்‌ முனைவோராக உருவாக வாய்ப்புள்ளது. இதனால்‌ வேளாண் துறையில்‌ புதிய தொழில்‌ நுட்பங்கள்‌ சார்ந்த தொழில்கள்‌ வளர்ச்சியடைவதோடு வேளாண் பட்டதாரிகள்‌ தொழில்‌ முனைவோர்களாகவும், வேலை வாய்ப்புகளை உருவாக்குபவர்களாகவும்‌ மேம்படுவார்கள்‌ என்றார்.



இந்நிகழ்ச்சியில்‌ தலைமை உரை ஆற்றிய தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர்‌ கீதாலட்சுமி, வேளாண் தொழில்‌ முனைவோருக்குத் தேவையான மத்திய, மாநில அரசின்‌ ஊக்குவிக்கும்‌ நலத்திட்டங்களை ஒரே குடையின்‌ கீழ்‌ செயல்படுத்தும்‌ நிறுவனமாக இப்பல்கலைக்கழகத்தின்‌ தொழில்நுட்ப வணிக காப்பகம்‌ திகழ்கிறது.

இந்த காப்பகம்‌ புதிய தொழில்‌ தொடங்குவதற்கான ஆர்வத்துடன்‌ வருபவர்களுக்குத் தேவையான தொழில்‌ நுட்பம்‌, சந்தைப்படுத்துதல்‌, தேவையான சான்றிதழ்‌, தரக்கட்டுப்பாடு, நிதி ஆலோசனைகள்‌ ஆகிய உதவிகளை அளித்து 500-க்கும்‌ மேற்பட்ட வேளாண்‌ தொழில்‌ முனைவோர்களை உருவாக்கியுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பலகலைக்கழகத்தின்‌ முன்னாள்‌ மாணவர்கள் தொழில்முனைவோர்கள்‌ வளர்ச்சி சார்ந்த திறன்‌ மேம்பாட்டுப் பயிலரங்கு மற்றும்‌ ஆலோசனைகளை இந்நாள்‌ மாணவர்களுக்கு வழங்குகின்றனர்‌. இதன்‌ மூலம்‌ பல வேளாண் பட்டதாரிகள்‌ தொழில்முனைவோராகும்‌ வாய்ப்புகள்‌ உருவாகிறது எனக் கூறினார்‌.

இந்நிகழ்ச்சியில்‌ பேசிய கோவை மாவட்ட தொழில்‌ மையத்தின்‌ பொதுமேலாளர்‌ ஜி. திருமுருகன்‌, வேளாண் சந்தைப்படுத்துதல்‌ மற்றும்‌ வேளாண்‌ வணிகத்துறை இணை இயக்குநர்‌ பெருமாள் சாமி, மாவட்ட முதன்மை வங்கியின்‌ மேலாளர்‌ கெளசல்யாதேவி, நபார்டு வங்கியின்‌ மாவட்ட வளர்ச்சி, மேலாளர்‌ திருமலாராவ்‌ மற்றும்‌ சிறு, குறு தொழில்‌ நிறுவன கோவை கிளை உதவி இயக்குநர்‌ கயல்விழி ஆகியோர்‌ கலந்து கொண்டு அரசின்‌ தொழில்‌ முனைவோருக்கான திட்டங்களைப் பற்றி பேசினர்.

இந்நிகழ்ச்சியில்‌ தமிழ்நாடு வேளாண்மை‌ப் பல்கலைக்கழகத்தின்‌ இயக்குநர்கள், முதனமையாளர்கள்‌ மற்றும்‌ பேராசிரியர்‌கள்‌ கலந்து கொண்டனர்‌.

மேலும்‌ வேளாண் தொழில்‌ முனைவோர்களின்‌ பொருட்காட்சியும்‌ நடைபெற்றது. இதில்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக மாணவர்கள், பேராசியர்கள்‌ மற்றும்‌ புதிய தொழிலமுனைவோர்கள்‌ கலந்துகொண்டு பயன்‌பெற்றனர்‌.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...