கோவையில் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பேருந்து இயக்கம்

சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேருந்தினை மாவட்ட ஆட்சியர் சமீரன் தொடங்கி வைத்தார்.


கோவை: நாடு முழுவதும் ஜனவரி 11ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. சாலை பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் சாலை விபத்துகளை குறைப்பதற்காகவும் உயிரை காப்பாற்றுவதற்காகவும் சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை ஒட்டி அரசு மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.



அதன்படி, இந்த வருடம் இன்று முதல் 17 ஆம் தேதி வரை அரசு சார்பில் சாலை பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, கோவையில் காந்திபுரம் மாநகர பேருந்து நிலையத்தில், சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேருந்தினை மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.



மேலும், பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளிடம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் அப்போது அவர் வழங்கினார். இந்தப் பேருந்தானது இந்த ஒரு வாரத்திற்கு கோவை மாநகரில் மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

அதேசமயம், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு காந்திபுரம் சிக்னலில் தனியார் மகளிர் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. அதில் மாணவிகள் சாலை விதிமுறைகள் குறித்து முகத்தில் ஓவியம் வரைந்தும், பதாகைகளை ஏந்தியும், பிரசுரங்கள் வழங்கியும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...