கோவையில் துணிவு படம் வெளியான திரையரங்கில் அத்துமீறலில் ஈடுபட்ட அஜித் ரசிகர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை: தைப் பொங்கலையொட்டி, நடிகர் அஜித் நடிப்பில் துணிவு திரைப்படமும், நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படமும் உலகம் முழுவதும் இன்று ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளன.
பல ஆண்டுகளுக்குப் பிறகு இருவரின் திரைப்படமும் வெளியாகிருப்பதை இரு தரப்பு ரசிகர்களும் உற்சாகமாகக் கொண்டாடிவருகின்றனர்.
கோவையில் உள்ள அர்ச்சனா திரையரங்கில் நள்ளிரவு ஒரு மணி அளவில் துணிவு படம் வெளியானது. இதனை கொண்டாடும் வகையில் அஜித் ரசிகர்கள், அந்தத் திரையரங்கம் முன்பு கூடி ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென ரசிகர்கள் சிலர் திரையரங்கிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர ரசிகர்கள் மீது தடியடி நடத்தினர்.

அப்போது ரசிகர்கள் சிலர் போலீசார் மீதும் பட்டாசுகளை கொளுத்தி வீசியதால் திரையரங்க வளாகத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதை அடுத்து திரையரங்கு வளாகத்திற்குள் இருந்த ரசிகர்கள் முற்றிலுமாக வளாகத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
துணிவு மற்றும் வாரிசு படம் வெளியாவதை முன்னிட்டு ஏற்கனவே இரண்டு தரப்பு ரசிகர்களுக்கும் காவல்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
அஜித் ரசிகர்கள் காவல்துறை கட்டுப்பாடுகளை பொருட்படுத்தாமல், திரையரங்குக்குள் அத்துமீறி நுழைந்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.