கோவையில் ‘முதல்வன்’ பட பாணியில் ஒரு நாள் ஆட்சியர் / போலீஸ்‌ கமிஷனர்‌ / மாநகராட்சி ஆணையர்‌ நிகழ்ச்சி

கோவை சங்கர்‌ ஐ.ஏ.எஸ்‌ அகாடமி சார்பில் ஒரு நாள் ஆட்சியர் / போலீஸ்‌ கமிஷனர்‌ / மாநகராட்சி ஆணையர்‌ நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெறும் நபர்கள் ஒரு நாள் முழுவதும் ஆட்சியர், கமிஷனர், மாநகராட்சி ஆணையர் ஆகியோருடன் பயணிக்க வாய்ப்பு.


கோவை: கோவை மாவட்டத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கும் விதமாக கோவை விழாவின் 15 வது பதிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கோவை விழாவில் YI YUVA மற்றும்‌ சங்கர்‌ ஐ.ஏ.எஸ்‌ அகாடமி இணைந்து‌ கல்லூரி மாணவர்களுக்கான ஒரு முன்‌ முயற்சியாக "ஒரு நாள்‌ ஆட்சியர்‌ / போலீஸ்‌ கமிஷனர்‌ / மாநகராட்சி ஆணையர்‌ " நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்வை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

இந்த போட்டியில் ஆட்சியர் ‌/ போலீஸ்‌ கமிஷனர்‌ / மாநகராட்சி ஆணையர்‌ ஆகியோர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் அது தொடர்பான தங்களது தீர்வு குறித்து PPT மூலம் பதிவு செய்ய வேண்டும். இப்போட்டியில்‌ வெற்றி பெறுபவர்‌ தங்களுடைய ஒரு நாளை ஆட்சியர்‌ / காவல்‌ ஆணையர்‌ / மாநகராட்சி ஆணையர்‌ உடன்‌ பயணம்‌ செய்யலாம்‌.

இந்த போட்டிக்கான தலைப்புகளை கோவையில் உள்ள‌ சங்கர்‌ ஐ.ஏ.எஸ்‌ அகாடமியில் பெற்றுக் கொள்ளலாம். PPTயை பதிவேற்ற வரும் ஜனவரி 19ஆம் தேதி கடைசி நாள். மேலும்‌ இந்த போட்டியில்‌ கலந்துகொள்ளும்‌ மாணவர்களுக்கு சங்கர்‌ ஐ.ஏ.எஸ்‌ அகாடமி கோவையில்‌ சேர்பவர்களுக்கு 25% கட்டண சலுகை வழங்கப்படும்‌.

மேலும்‌ விவரங்களுக்கு: 9840702761, 9994551898 என்ற எண்னை தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...