ஆளுநரின் உருவ பொம்மை எரித்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்க..! - கோவையில் பாஜகவினர் போராட்டம்

கோவையில் தமிழக ஆளுநரின் உருவ பொம்மையை எரித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என மாற்ற முயற்சிப்பதாகவும், சட்டப்பேரவை விதிகளை மீறுவதாகவும், ஜனநாயக மரபுகளை கடைபிடிக்காமல் நடந்து கொள்வதாகவும் கூறி அவரின் உருவ பொம்மை மற்றும் புகைப்படத்தை எரித்து போராட்டம் நடத்தினர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.



இந்நிலையில், ஆளுநருக்கு எதிராக போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினருக்குக் கண்டனம் தெரிவித்து சித்தாபுதூரில் பாஜக மாவட்ட அலுவலகம் முன்பு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், 30க்கும் மேற்பட்ட பாஜகவினர் பங்கேற்று, தந்தை பெரியார் திராவிடர் கழகத்திற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், ஆளுநருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு அவரின் உருவபொம்மையை எரித்தவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும் பாஜகவிர் அப்போது வலியுறுத்தினர்.



இதையடுத்து, அனுமதியின்றி திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கூறுகையில், "திராவிடர் கட்சியினர் ஆளுநரின் உருவ பொம்மையை எரித்தது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும் மாநிலச் சட்டத்திற்கும் புறம்பானது. இச்செயல் தமிழகத்திற்கு அவமானத்தைத் தேடித்தரும். திக மற்றும் திமுகவினரின் உந்துததாலேயே இந்தச் செயல் நடந்துள்ளது. உருவபொம்மை எரிப்பில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்க விட்டால் அடுத்தகட்டப் போராட்டத்தை முன்னெடுப்போம்" என்றார்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...