கோவையில் வக்ஃபு வாரிய சொத்து விற்பனையில் மோசடி? - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கோவையில் வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக விற்பனை செய்தது தொடர்பாக இரண்டு மாத காலத்திற்குள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு வக்ஃபு வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கோவை: போத்தனூர் கடைவீதி பகுதியில் மஸ்ஜித்துல் மதினா சுன்னத் வல் ஜமாத் உள்ளது. தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் இந்த மஸ்ஜித்துல் மதினா சுன்னத் வல் ஜமா அத்தின் உதவி தலைவர் பொறுப்பில் முகமது ஷாக்கீர் என்பவர் இருந்தார்.

கடந்த 1998 ஏப்ரல் மாதம் இவர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பள்ளி வாசலில் பணிபுரியும் இமாம் தங்குவதற்காக இடம் ஒதுக்கீடு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து, அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே 826 சதுரடி நிலம் வாங்கப்பட்டது. அதன் பிறகு, கடந்த 2005ஆம் ஆண்டு பள்ளிவாசலின் முன்னாள் தலைவர் பொறுப்பு வகித்த கலீம் பாட்ஷா, முன்னாள் செயலாளர் முகமது சாதிக் பாஷா, முன்னாள் முத்தவல்லி ஆசிப் காதர் பாஷா ஆகிய மூவரும், தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் பள்ளிக்கு சொந்தமான இடத்தை 2005ம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி பள்ளிக்கு சம்பந்தமில்லாத பஷீர் என்ற நபருக்கு முறைகேடாக விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சென்னை தமிழ்நாடு வக்ஃபு வாரிய முதன்மை செயல் அலுவலர் மற்றும் கோவை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் போத்தனூரைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் அளித்தனர்.

ஆனால் தலைமை நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் காலம்கடத்தி வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, போத்தனூர் பகுதி பொதுமக்கள் சார்பில், பார்விஷ்கான் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வக்ஃபு வாரிய சொத்தை முறைகேடாக விற்பனை செய்த முன்னாள் தலைவர் கலீம்பாட்சா, முகமது சாதிக் பாட்ஷா, அசிப் காதர் பாட்சா மூவரிடம் சென்னை தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமையிலான குழு, 2 மாத காலத்திற்குள் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...