கோவையில் வடிவேலு பாணியில் கிணற்றை காணவில்லை என ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பொதுமக்கள் முழக்கம் - பரபரப்பு..!

கோவை தீத்திப்பாளையம் அடுத்த விவேகானந்தர் நகரில் அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனை ஆக்கிரமிப்பை தடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகம் முன் கிணற்றை காணவில்லை என்ற பதாகைகளுடன் முழக்கம்.


கோவை: கோவை மாவட்டம் பேரூர் அடுத்த தீத்திபாளையம் விவேகானந்தர் நகரில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அங்கு அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனையை சிலர் ஆக்கிரமிப்பு செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.



இதனை கண்டிக்கும் விதமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த அப்பகுதியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள், கிணற்றை காணவில்லை என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பினர்.

இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர்கள் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கோவை தீத்திபாளையம் விவேகானந்தர் நகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகிறோம். இங்குள்ள 70 சென்ட் அங்கீகரிக்கப்பட்ட மனை பிரிவை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

இதனை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்ய முயற்சி செய்து வருகின்றனர். மேலும் மனை பிரிவுகளில் உள்ள கிணற்றையும் காணவில்லை.

எனவே ரிசர்வ் சைட்டை ஆக்கிரமித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அங்கு ஊராட்சிக்கு சொந்தமான இடம் என்று அறிவிப்பு பலகை வைப்பதோடு கம்பி வேலியிட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்களது மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளுடன் பொதுமக்கள் முழக்கங்களை எழுப்பியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை கணேசபுரம் பள்ளி கட்டுமானத்தை மேயர் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் கணேசபுரம் பகுதியில் ரூ.95 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப் பள...

கோவை பீளமேடு பகுதியில் மழைநீர் வடிகால், சாக்கடை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் ரூ.10 லட்சம் மழைநீர் வடிகால் பணி, சாக்கடை அடைப்பு சரிசெய்தல், குப்பை சேகரிப்பு, மரக்குப...

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான வங்கிக் கடன் சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.15,000 வங்கிக் கடன் வழங்க ஆகஸ்ட் 24 முதல் 29 வரை பிரதான அலுவலகம் மற்றும்...

ஓணம் பண்டிகை: பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஓணம் பண்டிகையையொட்டி பயணிகளின் அதிகரித்த தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பெங்களூரு SMVT மற்றும் திருவனந்தபுரம் வட...