'வீட்டுக்கு கரண்ட் பில் ரூ.70 ஆயிரமா..?' - அதிர்ச்சியில் கோவை ஆட்சியரிடம் புகார் அளித்த குடும்பம்!

கோவையில் உக்கடத்தை சேர்ந்த ஹாபியா என்பவரது வீட்டிற்கு 70 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்ககோரி ஹாபியா குடும்பத்தினர், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை உக்கடம் கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்தவர் ஹாபியா. இவரது வீட்டிற்கு மின் கணக்கீடு செய்வதற்காக கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதி மின்துறை அதிகாரிகள் சென்றனர். அப்போது, ஹாபியாவின் வீட்டிற்கு 70 ஆயிரம் ரூபாய் மின் கட்டணமாக வந்திருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஹாபியா, இந்த பிரச்சனை தொடர்பாக சம்பந்தப்பட்ட மின்துறை அதிகாரிகளிடம் முறையிட்டார். அப்போது, மொத்த கட்டணமான ரூ. 70 ஆயிரத்தில், 40 ஆயிரம் ரூபாயை அட்ஜஸ்ட் செய்து கொள்வதாகவும், மீதமுள்ள ரூ.30 ஆயிரம் ரூபாயை, வாரம் ரூ.6 ஆயிரம் வீதம் செலுத்த வேண்டுமென அதிகாரிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, வீட்டிற்கு ரூ.70 ஆயிரம் மின் கட்டணம் எப்படி வந்தது, இந்தத் தொகையை என்னால் செலுத்த இயலாது என்று கூறிய ஹாபியா, இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து உரிய ஆய்வு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மின்வாரியத்தில் புகார் அளித்தார்.



இந்த புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையையும் மின்வாரிய அதிகாரிகள் எடுக்காததால், வேதனையடைந்த ஹாபியா, கோவை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளார்.

ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹாபியா, "எங்களுக்கு 200 ரூபாயிலிருந்து 250 ரூபாய் வரை மட்டுமே மின் கட்டணம் வரும். கடந்த மாதம் 70ஆயிரம் ரூபாய் மின் கட்டணமாக வந்தது. நாங்கள் இதுகுறித்து மின்சார வாரிய அலுவலகத்தில் புகார் கொடுத்து இருந்தோம்.

இந்த பணத்தை எங்களால் கட்ட முடியாது. மின் அளவீட்டு மீட்டர் மாற்றி ஆறு மாதம் ஆகிறது. எங்கள் வீட்டில் டிவி, ஃபேன், ஃப்ரிட்ஜ் இரவு நேரங்களில் மட்டுமே பயன்படுத்துகின்றோம். எங்கள் வீட்டில் வேறு எந்த மின் பொருளும் இல்லை" என்றார்.

மேலும், மின்துறை அதிகாரிகள் தற்பொழுது 40 ஆயிரம் ரூபாயை நாங்கள் சலுகையாக தருகிறோம் எனக் கூறுவதாகவும், இவ்வளவு பணத்தை நாங்கள் எப்படி கட்டுவது? இதற்கு யார் பொறுப்பு? என்று கேள்வியெழுப்பிய ஹாபியா, எனவே, இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்திருப்பதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய ஹாபியா, மின்வாரிய அதிகாரிகள் இந்தப் பிரச்சனை குறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுத்து, தவறு எங்கு நடந்துள்ளது என்பதைக் கண்டறிந்து, அவற்றை சரிசெய்துகொள்ள வேண்டுமென வலியுறுத்தியதோடு, இதுபோன்ற மின்கட்டண குளறுபடிகளை சாமானிய மக்களின் தலையில் சுமத்தக் கூடாது எனவும் கோரிக்கைவிடுத்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...