'டாஸ்மாக் கடை வேண்டாம்..!'- கோவை செல்வபுரம் பகுதி பொதுமக்கள் காலி மதுபாட்டில்களுடன் ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த செல்வபுரம் காலனியில் பள்ளிகள், தேவாலயங்கள், நியாய விலைக்கடைக்கு அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நூதன முறையில் மனு.


கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த செல்வபுரம் காலனியில் பள்ளிகள், தேவாலயங்கள், நியாயவிலைக்கடை உள்ள பகுதியில் மதுபான கடை அமைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது.



இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காலி மதுபாட்டில்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த அப்பகுதி மக்கள், மதுபான கடை அமைக்கப்படுவதை தடுக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து கருமத்தம்பட்டி நகராட்சியின் 25 வது வார்டு கவுன்சிலர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது, சோமனூரை அடுத்த செல்வபுரம் காலனி பகுதியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தது.

இதன் காரணமாக மக்கள் அனைவரும் போராட்டம் நடத்தி அந்த டாஸ்மாக் கடையை அகற்றினோம். இதனிடையே சவுந்திரராஜன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் மீண்டும் டாஸ்மாக் கடை அமைக்க பணிகள் நடைபெறுகிறது.

டாஸ்மாக் கடை அமைக்க முயற்சிகள் மேற்கொண்டு வரும் பகுதியில் பள்ளிகள், தேவாலயம், மசூதி, நியாயவிலைக்கடை மற்றும் குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்தால் அவ்வழியாக செல்லும் பள்ளி குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.



எனவே இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்துள்ளோம். இங்கு டாஸ்மாக் கடை அமைத்தால் மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிராக மனு அளிக்க வந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோஷங்களை எழுப்பியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...