'தமிழ்நாடு வாழ்க..' - கோவையில் மக்கள் நீதி மய்யம் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

ஆளுநர் ஆர்.என்.ரவியின் தமிழ்நாடு - தமிழகம் கருத்து சர்ச்சைக்குள்ளான நிலையில், கோவை மாநகர் பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் சார்பில் 'தமிழ்நாடு வாழ்க' என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.


கோவை: சென்னை கிண்டியில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்கலாம் என்று கூறியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினர் ஆளுநர் அவ்வாறு கூறியது ஏற்கத்தக்கதல்ல என்றும் 'தமிழ்நாடு' என்று தான் கூற வேண்டும் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே பாஜகவை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் ஆளுநர் பேசியது பிரிவினை வாதத்தை தூண்டுவதற்காக இல்லை எனவும் அதனை அரசியலாக்க வேண்டாம் எனவும் கூறி வருகின்றனர். அதேபோல் சமூக வலைத்தளங்களில் பலரும் தமிழகம் - தமிழ்நாடு சர்ச்சை குறித்து அவரவர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.



இந்நிலையில் கோவை லங்கா கார்னர் பகுதியில் கோவை மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பில் “தமிழ்நாடு வாழ்க” என போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. அதில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பாரதியார் போல வேடம் அணிந்த புகைப்படமும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...