தனியார் கல்லூரியில் கோவை விழா - உறியடி, சமையல் போட்டியுடன் கொண்டாட்டம்

கோவையில் தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்த கோவை விழாவில், பாரம்பரிய உணவுகளை சமைத்தும், உறியடி நடத்தியும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.



கோவை: கோவை துடியலூரை அடுத்த வட்டமலைபாளையம் தனியார் பொறியியல் கல்லூரியில் கோயம்புத்தூர் விழா 2023 நடைபெற்றது. யுவா கிளப் மற்றும் தமிழ் மன்றம் இணைந்து பாரம்பரிய சமையல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை நடத்தினர். இந்தப் போட்டிகளில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவ- மாணவியர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.



பாரம்பரிய சமையல் போட்டியில் , 200க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர் பங்கேற்று விறகு அடுப்பில், மண்பானைகளைக் கொண்டு சமைத்தனர். தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில், விறகு அடுப்பு மற்றும் மண்சட்டிகளை பயன்படுத்தி திருவாதிரை களி, கம்பு அடை, கேப்பை ரொட்டி போன்ற பல பாரம்பரிய உணவுகளை மாணவ-மாணவியர் ஆர்வத்துடன் செய்து பார்வையாளர்களை அசத்தினர்.



போட்டியாளர்கள் சமைத்த பாரம்பரிய உணவுகளை, கல்லூரி பேராசிரியர்கள் நடுவர்களாக இருந்து ருசித்துப் பார்த்து பரிசுபெறும் மாணவ-மாணவியர் குழுக்களைத் தேர்வு செய்தனர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று அணிகளுக்கு யுவா கிளப் மற்றும் தமிழ் மன்றம் சார்பில் பணப் பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.



இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பாரம்பரிய உறியடிப் போட்டியில், 250-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் பங்கேற்று, தங்களது கண்களைக் கட்டிக்கொண்டு ஆர்வத்தோடு உயரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த பானைகளை குச்சியால் உடைத்து அங்கிருந்த பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...