கோவையில் பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழா - ரேக்ளா பந்தயத்தை தொடங்கி வைத்த நடிகை குஷ்பு

கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் நடிகையும் பாஜக உறுப்பினருமான குஷ்பு கலந்து கொண்டு, ரேக்ளா பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை மாவட்டம் வெள்ளலூர் நெடுஞ்சாலை அருகே பாஜக சார்பில் நம்ம ஊர் பொங்கல் திருவிழா நடைபெற்றது. கோவை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் வசந்தராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நடிகையும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு கலந்து கொண்டார்.



முன்னதாக அப்பகுதியை சேர்ந்த மக்களுடன் பொங்கல் வைத்து வழிபட்ட குஷ்பு, பொங்கலை பொதுமக்களுடன் பரிமாறிக் கொண்டார்.



இதனிடையே நடைபெற்ற வள்ளி கும்மியாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு ஆடினார்.



அதனை தொடர்ந்து நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தை, குஷ்பு ரேக்ளா வண்டியில் சென்று கொடி அசைத்து பந்தயத்தை துவக்கி வைத்தார். இந்த ரேக்ளா பந்தயம் 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் என இரு பிரிவுகளாக நடைபெற்றது. இதில் சுமார் 40க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் பங்கேற்றன.



இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் குஷ்பு பேசியதாவது, தமிழ்நாட்டை தமிழகம், தமிழ்நாடு என்றும் அழைக்கலாம் அது தவறில்லை. எப்படி அழைத்தாலும் அது இந்தியாவின் அங்கம் தான்.

பொங்கல் நம்முடைய பாரம்பரிய பண்டிகை, வீட்டில் சந்தோஷம் கொடுக்கும் பண்டிகை இது. தமிழக அரசின் பொங்கல் பரிசு வெட்கக்கேடானது. ஒரு கரும்பு, ஆயிரம் ரூபாய் கொடுப்பது பிச்சை கொடுப்பது போன்று.

திமுகவில் பெண்களுக்கு பேருந்து கட்டணம் இலவசம் என்று ஒருவர் கூறுகிறார். மற்றொருவர் பெண்களை இழிவாக பேசுகிறார். சுயமரியாதை உள்ள ஒவ்வொரு தமிழனும் இவற்றை வேண்டாம் என்று தான் கூறுவார்கள்.

தமிழ் கலாச்சாரத்தை பாதுகாப்பதாக சொல்லும் திராவிட அரசு, இவ்வளவு கேவலமாக நடந்துக் கொள்ள கூடாது. பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது. எல்லா பெண்களும் வெளியே போகவில்லை. நானும் கட்சியில் தானே இருக்கிறேன். திமுகவில் தான் எனக்கு எதிராக நடந்து கொண்டனர்.

ராகுல் காந்தி நடைபயணத்தில் கமல்ஹாசன் பங்கேற்றது அவருடைய கட்சியின் உரிமை. பொங்கலுக்கு துணிவு, வாரிசு படத்திற்கு போகவில்லை. நான் வீட்டில் தான் இருப்பேன்.

அண்ணாமலை துணிச்சலான தலைவர், முந்தைய தலைவர்கள் போன்று இல்லை. தமிழகம் , தமிழ்நாடு என்று சொல்வது தவறில்லை. மும்பையில் பிறந்தாலும் நான் தமிழச்சி தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...