கோவையில் மாரத்தான் ஓடிய கலெக்டர், கமிஷனர்!

கோவை விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற மாரத்தான் போட்டியில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் ஆணையாளர் ஆகியோர் பங்கேற்றனர்.


கோவை: கோவை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் அமைப்புகளின் பங்களிப்புடன் கோவை விழா நடைபெற்று வருகிறது. கோவை விழா கடந்த 4ம் தேதி துவங்கி இன்றுடன் முடிவடைகிறது.

இதுவரை நடைபெற்ற கோவை விழாவில் பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் மேற்கொண்டனர்.



கோவை விழாவின் நிறைவு நாளான இன்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக நேரு விளையாட்டு அரங்கம் அருகில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் ஐந்து வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



இந்த மாறத்தான் போட்டி 2.5 கிமீ, 5 கிமீ, 10 கிமீ என பல பிரிவுகளில் நடைபெற்றது. இதில் பத்து கிலோமீட்டர் பிரிவில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உட்பட காவல்துறையினர் பலரும் பங்கேற்றனர்.



மாரத்தான் போட்டியில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் ஆணையாளர் ஆகியோர் பங்கேற்றது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.



மாரத்தான் போட்டிகள் பங்கேற்ற பலரும் அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...