கோவையில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் - ஆட்சியர் ஆலோசனை

கோவை மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடத்துவது குறித்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ரகு, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாகரநாத்சிங் உட்பட அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் பேசிய ஆட்சியர் சமீரன், தமிழ்நாடு முதலமைச்சர் ஒலிம்பிக் விளையாட்டுகள் மற்றும் கபடி, சிலம்பாட்டம் என இரண்டு பாரம்பரிய விளையாட்டுகளுக்கான மாநில மற்றும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.

மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள். மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என ஐந்து பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக பங்கேற்கும் வகையில் 42 மாவட்ட அளவிலான போட்டிகளும், 8 வகையான மண்டல அளவிலான போட்டிகளும் என மொத்தம் 50 வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

மாவட்ட அளவிலான போட்டிகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களிலும்,மாநில அளவிலான போட்டிகள் மே மாதமும் நடைபெற உள்ளது. மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் அதிக எண்ணிக்கையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போட்டியாளர்கள் கலந்து கொள்ள ஏதுவாக தேவையான விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

போட்டிகள் நடத்தப்படும் இடங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இடங்களை சுத்தம் செய்தல், அடிப்படை வசதிகள், மருத்துவ முதலுதவிகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்தல் வேண்டும்.

முதலமைச்சர் கோப்பைக்கான இணையதள பதிவு 17.01.2023 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர்கள் இதற்கான பதிவுகளை wwwsdattugtow.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...