கோவை வேளாண் உற்பத்தி பொருட்கள் வணிகர்கள், அலுவலர்களுடான ஆய்வு கூட்டம்

வேளாண் உற்பத்தி பொருட்கள் வணிகர்கள் மற்றும் அலுவலர்களுடான ஆய்வுக்கூட்டம், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் இயக்குநர் நடராஜன் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன் முன்னிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது.


கோவை: இக்கூட்டத்தில் பேசிய வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை இயக்குநர் நடராஜன், கோவை மாவட்டத்தில் அனைத்து உழவர் சந்தைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறி மற்றும் பழங்களை இடைத்தரகர்கள் குறுக்கீடின்றி நேரடியாக விற்பனை செய்யவும் முடிகின்றது.

வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகள், உழவர், உற்பத்தியாளர், நிறுவனங்கள், வேளாண் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களுக்கு தேவையான கட்டுமான வசதிகளை ஏற்படுத்திகொள்ளவும், இதற்கு வங்கியில் 4 சதவட்டியில் வங்கிகடன் பெறவும் எதுவாக வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட தொகைக்கு 3 சதவிகிதம் வட்டியில் விலக்கு அளிக்கப்படுவதால் நிகர வட்டிவிகிதம் 1 சதவிகிதமாகவும் உள்ளது.

இந்த திட்டத்தினை விவசாயிகள் அனைவரும் பெற்றுக் கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். மேலும், மாநிலம் முழுவதிலும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அமைத்திடும் நோக்கில் விவசாயிகள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தோற்றுவித்து செயல்படுத்திட பல்வேறு வகையில் ஊக்கப்படுத்தி வருகின்றது.

உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் விளைப்பொருட்களை கொள்முதல் செய்து விற்பனைமற்றும் விதை உரங்கள் பயிர் பாதுகாப்பு மருந்துகள் வணிகம் செய்வது மூலமாக லாபம் ஈட்டவும் இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தற்போது பங்குதாரர்களுக்கு விதை, உரம் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து வழங்கவும் விளைவிக்கப்பட்ட பொருட்களை மதிப்பு கூட்டவும், மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்யவும் தேவையான நிதி அரசிடமிருந்து பெறவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அரசின் இதுபோன்ற முன்னோடித் திட்டங்களை விவசாயிகள், வேளாண் மதிப்புகூட்டு பொருள் தாயாரித்து விற்பனை செய்வோர் பயனடையும் வகையில் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என்று தெரிவித்தார்.



இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சபி அகமது மற்றும் வணிகர்கள் வேளாண் விற்பனைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...