கோவை துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா-வில் ஆட்சியர் சமீரன் ஆய்வு

கோவை துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா நிறுவனத்தில் உள்ள உற்பத்தி பிரிவுகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் நேரில் ஆய்வு செய்தார்.


கோவை: துடியலூரில் உள்ள துடியலூர் கூட்டுறவு விவசாய சேவை நிறுவனத்தில் பூச்சிக்கொல்லி மருந்து உற்பத்தி பிரிவு. விவசாய உபகரணப் பிரிவு, பெட்ரோல் பங்க் பிரிவு, விதை பிரிவு, அச்சகப் பிரிவு, பொது சேவை மையம், நுண்ணூட்டச் சத்து உரப்பிரிவு, சில்லறை விற்பனை பிரிவு செக்கு எண்ணெய் பிரிவு, ஆவின் பிரிவு ஆகிய பிரிவுகள் உள்ளன.



அதில், உரத் தயாரிப்பு பிரிவு, வேப்ப புண்ணாக்கு உற்பத்தி பிரிவு, நுண் ஊட்டச்சத்து உரப்பிரிவு, விதைப்பிரிவு, பூச்சிக்கொல்லி மருந்து பிரிவு மற்றும் சங்கத்தின் சேவை பிரிவுகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு செய்து, உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விவரங்கள் கேட்டறிந்தார். பொருட்கள் தரமாக உற்பத்தி செய்யப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தார்.



மேலும் வேளாண்மை துறையின் உற்பத்தி தடை நீங்கி மீண்டும் ஒதுக்கீடு பெற்று துவங்கப்பட்ட கலப்பு உரத்தயாரிப்பு பிரிவின் விற்பனையினை துவக்கி வைத்தார்.

அப்போது, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன், மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் இந்துமதி, டியுகாஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சிவகுமார், வேளாண்மை இணை இயக்குநர் முத்துலட்சுமி, கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...