'பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துக..!' - கோவையில் ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கோவை மாவட்ட மையத்தினர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வெளியிலும் பின்னர் வளாகத்திற்கு உள்ளும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர். இதில் அரசு ஊழியர் சங்க கோவை மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார்.



"பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், நிலுவையில் உள்ள அகவிலைப் படியை உடனடியாக வழங்க வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதல் நிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.

தொகுப்பூதியம் சிறப்பு கால முறை ஊதியம் மற்றும் தினக்கூலியில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்துணவு, அங்கன்வாடி, எம்ஆர்பி செவிலியர்கள், வருவாய் கிராம உதவியாளர், ஊர் புற நூலகர் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

சாலை பணியாளர்களில் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும், முதல்வரிடம் ஜாக்டோ ஜியோ சார்பில் வழங்கப்பட்ட வாழ்வாதாரக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...