கோவை விழாவின் ஒரு பகுதியாக, கோவை நகரில் 1916 முதல் 1960 வரையிலான பழங்கால கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
கோவை: கோவையில் தனியார் அமைப்புகள் ஒன்றிணைந்து கோவை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தினமும் ஒவ்வொரு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதைத் தொடர்ந்து, கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள காஸ்மாபாலிடென் கிளப்-லிருந்து சரவணம்பட்டி வரை பழங்கால கார்கள் அணிவகுப்பு நடைபெற்றது.
கடந்த 1916 முதல் 1960 வரை பயன்படுத்தப்பட்ட தற்போது நல்ல நிலையில் உள்ள 41 கார்கள் மற்றும் 20 இருசக்கர வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பியட், பென்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த கார்கள் மற்றும் பழைய ஸ்கூட்டர் உள்பட இருசக்கர வாகனங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்த நிகழ்ச்சியை நிகழ்ச்சியை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.
கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் அணிவகுப்பு, அவிநாசி சாலை மற்றும் கணபதியை கடந்து சரவணம்பட்டி சென்றடைந்தன.
இந்த கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மாலில் நிறுத்தப்பட்டு இரண்டு நாட்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.
இந்த வாகனங்கள் முன்பாக நின்றுக் கொண்டு கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் பிரியர்கள், ஆர்வமுடம் கண்டுகளித்து, புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.