திமுக - அதிமுக கூட்டணி இல்லாமல் தனித்தனியாக போட்டியிடலாமா..? - கோவையில் எஸ்.பி.வேலுமணி சவால்

கோவை மாதம்பட்டி அருகே அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பின் பேசிய எஸ்.பி.வேலுமணி திமுக பெரிய கட்சி அல்ல, திமுகவும் அதிமுகவும் கூட்டணி இல்லாமல் தேர்தலில் போட்டியிட்டால் தெரிந்துவிடும் என்றார்.


கோவை: சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்டவற்றை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழக அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி இன்று கோவை மாதம்பட்டி ஊராட்சியில் தொண்டாமுத்தூர் ஒன்றிய செயலாளர் டி.பி.வேலுச்சாமி, மாதம்பட்டி ஒன்றிய செயலாளர் சக்திவேல், பேரூர் ஒன்றிய கழக செயலாளர் ராமமூர்த்தி, சேர்மன் மதுமதி விஜயகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தொண்டாமுத்தூர் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்தும் சொத்து வரி மின்கட்டணம் உயர்வு ஆகியவற்றை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏவுமான எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் பேசியதாவது, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கோவையில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியின் போது கொண்டு வரப்பட்டு திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளதை கண்டித்தும் சாலைகள் சீரமைப்பை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் கோவை மாவட்டம் 50 ஆண்டு காலங்கள் இல்லாத வளர்ச்சியை கண்டது. தற்போது, திமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. கோவை மாவட்டம் புறக்கணிக்கப்படுகிறது. சொத்துவரி, பால் விலை, மின் கட்டண உயர்வை எல்லாம் ரத்து செய்ய வேண்டும்.

பாமக கூட்டணியில் இருந்ததால் தான் அதிமுக ஆட்சிக்கு வந்ததாக பாமக தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் குறித்த கேள்விக்கு, இதற்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளிப்பார் என்றார்.

தமிழ்நாட்டில் திமுக பெரிய கட்சி கிடையாது, அதிமுக தான் பெரிய கட்சி. தைரியம் இருந்தால் அதிமுகவும், திமுகவும். கூட்டணி இல்லாமல் தனித்தனியாக போட்டியிடலாமா என சவால் விடுத்தார். தமிழ்நாட்டில் பேரூராட்சி, ஊராட்சி மற்றும் கிராமங்கள் தோறும் திமுக அரசை எதிர்த்து போராட்டம் நடத்துகின்ற சக்தி அதிமுகவுக்கு தான் உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...