கிணத்துக்கடவு அடுத்த சங்கராயபுரம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் மாயமான நிலையில், புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள சங்கராயபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் தனது சகோதரி சகுந்தலாவின் மூத்த மகள் மாலதியை சிறுவயதில் இருந்தே தன் வீட்டில் வைத்து வளர்த்து வந்துள்ளார்.
இதனிடையே கடந்த மூன்றாம் தேதி மாலை செல்வராஜ் மற்றும் அவரது மனைவி கவுசல்யா ஆகியோர் பொள்ளாச்சிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த மாலதி காணாமல் போனது தெரியவந்தது.
பல இடங்களில் தேடி பார்த்தும் மாலதி கிடைக்காததால் நேற்று மாலை கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் செல்வராஜ் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாயமான மாலதியை தேடி வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.