கோவையில் சுகாதாரத்துறை சார்பில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் - ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கோவை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மாவட்ட சுகாதார பேரவை கூட்டத்தில் சுகாதார மேம்பாடு உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கப்பட்டன.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் சுகாதார மேம்பாடு குறித்து மக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டன.



மேலும், துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், இணை சுகாதார நிலையங்களில் சுகாதார உட் கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, தேவையான களப்பணியாளர்களை நியமனம் செய்வது, அரசு மருத்துவமனைகள் சுகாதார நிலையங்களில் நிரப்பப்பட வேண்டிய பணியாளர்களின் விவரங்கள், போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டன.



இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன் பேசியதாவது, இப்பேரவையில் வைக்கப்படும் கோரிக்கைகள் மாநில அளவிலான சுகாதாரப் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. பின்னர் முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் மாநில அளவிலான பேரவை கூட்டத்தில் இந்த கோரிக்கைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வாய்ப்புகள் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.



முன்னதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, குடும்ப நலத்துறை, சித்த மருத்துவ துறை, மாவட்ட சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் ஆகிய துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரசு திட்டங்கள் தொடர்பான கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.



இக்கூட்டத்தில் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ,மேயர் கல்பனா ஆனந்தகுமார், கோவை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...