ஒப்பந்த செவிலியர்கள் பணி நீக்கத்தை கண்டித்து கோவையில் கருப்பு பட்டை அணிந்து பணி செய்த செவிலியர்கள்

கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் 200 க்கும் மேற்பட்ட எம்.ஆர்.பி செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்தபடி பணி செய்தனர்.


கோவை: கொரோனா தொற்று பரவலின் போது, மருத்துவப் பணிகள் தேர்வாணையத்தின் மூலம் 3,200 செவிலியர்கள், அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். கொரோனா அச்சுறுத்தல் நீடித்ததால் அரசின் கோரிக்கைக்கு இணங்க தொடர்ந்து செவிலியர்களை பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஜனவரி 1 ஆம் தேதியுடன் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள், பணி நீக்கம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனை பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்த்த நிலையில் இரண்டு தினங்களாக ஒப்பந்த செவிலியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.



இதன் தொடர்ச்சியாக, அவர்களுக்கு ஆதரவு தரும் விதமாக, செவிலியர்கள் பணி நீக்கத்தை எதிர்த்து தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பாக செவிலியர்கள் தமிழகம் முழுவதும் கருப்பு பட்டை அணிந்தபடி பணியில் ஈடுபட்டனர்.



இதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள சுமார் 200 எம்.ஆர்.பி. செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்தபடி பணிகளை மேற்கொண்டனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...