கோவை வழியாக கேரளாவிற்கு கடத்த முயன்ற 200 கிலோ கஞ்சா பறிமுதல் - 2 பேர் கைது

கோவை வழியாக கேரளாவிற்கு கடத்த முயன்ற 200 கிலோ கஞ்சாவை கேரளா கலால் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


கோவை: ஆந்திரா மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சா, கோவை வழியாக கேரளாவிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதனை தடுக்க கேரள எல்லையான வாளையாறு, வேலந்தாவளம் உள்ளிட்ட பகுதிகளில் கேரளா கலால் துறை அதிகாரிகள் தொடர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று வழக்கம் போல் கலால் துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் வாளையார் சோதனை சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.



அப்போது கர்நாடகா பதிவு எண் கொண்ட மீன் லோடு ஏற்றி வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் மீன் பெட்டிகளுக்கு இடையே மூட்டை மூட்டையாக கஞ்சா இருப்பது தெரியவந்தது.



மூட்டைகளில் இருந்து 200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த கலால் துறை அதிகாரிகள், கஞ்சாவை கடத்தி வந்த மயிலாடுதுறையை சேர்ந்த மாரிமுத்து (27), செல்வம் (38) என இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...