கோவையில் தனியார் விடுதியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

கோவையில் உள்ள தனியார் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.


கோவை: திருவள்ளூர் மாவட்டம் ருக்மணி நகரை சேர்ந்தவர் தரணி. கடந்த 30 ஆம் தேதி கோவை வந்த அவர், ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார். கோவைக்கு தொழில் சார்ந்து பல்வேறு பொருட்களை வாங்க வந்ததாக கூறியிருந்த தரணி, நேற்று விடுதியில் இருந்து நீண்ட நேரம் வெளியே வரவில்லை.

சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள், கதவை தட்டிய போதும் அவர் திறக்கவில்லை. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தூக்கில் தொங்கிய நிலையில் தரணி சடலமாக கிடந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காட்டூர் போலீசார், சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...