கோவையில் வாங்கிய கடனை திருப்பி கேட்டபோது தகராறு-கடன் தந்தவர் விட்ட பளாரில் பறிபோன உயிர்

கோவை பீளமேடு அருகே ரூ.200 கடனை திருப்பி கேட்ட போது ஏற்பட்ட தகராறில் கடன் தந்தவர் அறைந்ததில், சுருண்டு விழுந்த கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம்.


கோவை: கோவை மாவட்டம் பீளமேடு அடுத்த புதூரை சேர்ந்தவர் கங்கேஸ்வரன். கூலி தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த லட்சுமிமணன் ரியல் எஸ்டேட் புரோக்கரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.200 கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கங்கேஸ்வரன் அந்த பணத்தை திருப்பி தராமல் இருந்து வந்துள்ளார். இதனிடையே லட்சுமணன் பலமுறை கேட்டும் அவர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கங்கேஸ்வரன் சவுரிபாளையம் டாஸ்மாக் கடை முன்பு நின்று கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த லட்சுமணன் கங்கேஸ்வரனிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதில் ஆத்திரமடைந்த லட்சுமணன், கங்கேஸ்வரன் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இதில் சுருண்டு கீழே விழுந்த கங்கேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பீளமேடு போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ரியல் எஸ்டேட் புரோக்கர் லட்சுமணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

200 ரூபாய் கடனை திருப்பி கேட்ட போது ஏற்பட்ட தகராறில் கன்னத்தில் அறைந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...