அழகுமலை பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்க கோரி காளைகள் வளர்ப்போர் மற்றும் மாடுபிடி வீரர்கள் என 50க்கும் மேற்பட்டோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அழகுமலை பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த கூடாது என அழகுமலை ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் முடிவு செய்யலாம் என நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால், இது குறித்து இரு தரப்பினரிடமும் மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுவரை எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை.

இதனிடையே ஜல்லிக்கட்டு போட்டி நடத்தக் கூடாது என சிலர் அரசியல் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாகவும், வருடா வருடம் நடப்பது போல் இந்த ஆண்டும் நடத்த அனுமதி வழங்க கோரி அழகுமலையை சேர்ந்த 50 மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.