புத்தாண்டில் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் -கோவை மாவட்ட தொழில்துறையினர் நம்பிக்கை

அமெரிக்க ஆயத்த ஆடை சந்தை திருப்தி அளிப்பதாகவும், சீனாவில் ஏற்பட்டுள்ள தொற்று பாதிப்பால் சகஜ நிலைக்கு திரும்ப 3 மாதங்களாகும் என்பதால், சீனாவுக்கான பெரும்பாலான பணி ஆணைகள் இந்தியாவுக்கு கிடைக்கும் என கருத்து.


கோவை: ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் தொழில்துறை சிறப்பான வளர்ச்சியை பெறும் என நம்புவதாக தொழில்துறையினர் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (கொடிசியா) தலைவர் திருஞானம் கூறியதாவது, புத்தாண்டில் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். அனைத்து தொழில்களும் வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்கும் என நம்புகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதேபோல், இந்திய தொழில் முனைவோர் சங்கத்தின் தேசிய தலைவர் ரகுநாதன் கூறியதாவது, இந்த ஆண்டு எத்தனை சோதனைகள் வந்தாலும், அவற்றை எதிர்த்து போராடி தொழில் முனைவோர் அனைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் பேசினார்.

கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கத்தின் (காட்மா) தலைவர் சிவக்குமார் கூறியதாவது, மத்திய அரசு சார்பில் பொதுத்துறை நிறுவனத்தை கோவையில் அமைக்க வேண்டும்.

தமிழக அரசு குறுந்தொழில் வளர்ச்சி வங்கி தொடங்க வேண்டும். சொத்து வரி மற்றும் மின்கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கோவை வெட் கிரைண்டர் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (கவுமா) முன்னாள் தலைவர் சாஸ்தா எம்.ராஜா கூறியதாவது, புத்தாண்டின் முதல் மூன்று மாதங்களில் அதிக சவால்கள் காத்திருக்கும்.

தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழப்பைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து, தொழில் நிறுவனங்கள் ஊதியம் வழங்குவதில் சிறிது பங்களிப்பு செய்யும் வகையில் சிறப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்திய ஜவுளி தொழில் முனைவோர் கூட்டமைப்பு (ஐடிஎப்) கன்வீனர் பிரபு தாமோதரன் கூறியதாவது, இரண்டு அம்சங்கள் புத்தாண்டில் நம்பிக்கை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன.

அமெரிக்க ஆயத்த ஆடை சந்தை திருப்தியளிக்கும் வகையில் உள்ளது. சீனாவில் தற்போது நிலவும் நோய்தொற்று பாதிப்பு காரணமாக சகஜ நிலைக்கு திரும்ப குறைந்தது 3 மாதங்களாவது ஆகும். இதனால் இந்திய தொழில் நிறுவனங்கள் பயன்பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வார்ப்பட தொழில் தேசிய அமைப்பான இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியன் பவுண்டரி மென் (ஐஐஎப்) தென்மண்டல தலைவர் முத்துகுமார் கூறியதாவது, கடந்தாண்டு அக்டோபர் வரை டிராக்டர் விற்பனை 17.28 சதவீத வளர்ச்சியையும், ஆட்டோமொபைல் துறை 11 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்தன.

இதனால் வார்ப்பட தொழிற்சாலைகள் பயன்பெற்றன. எதிர்வரும் நாட்களில் சீனாவுக்கான பெரும்பாலான பணி ஆணைகள் இந்தியாவுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கேற்ப மத்திய, மாநில அரசு உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கொங்கு குளோபல் போரம் (கேஜிஎப்) இயக்குனர் நந்தகுமார் கூறியதாவது, 2023 ஆம் ஆண்டு கோவை விமான நிலைய விரிவாக்கத் திட்டம் செயல்பட தொடங்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. கோவை - துபாய் உள்ளிட்ட வெளிநாடு மற்றும் உள்நாட்டு பிரிவில் புதிய விமான சேவை புத்தாண்டில் தொடங்க அதிக வாய்ப்பு உள்ளது,

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் (டாக்ட்) மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது, புத்தாண்டில் மத்திய, மாநில அரசு குறுந்தொழில் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள போதும், அவற்றை எதிர்த்து போராடி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது,

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...