திருப்பூர் பல்லடம் அருகே கட்டிட தொழிலாளி அடித்து கொலை - உறவினர்கள் திடீர் சாலை மறியல்: பரபரப்பு

பல்லடம் அருகே கட்டிட வேலை செய்து வந்த விருதுநகரை சேர்ந்த முத்துசெல்வம் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில், காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.



திருப்பூர்: விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் முத்துச் செல்வம்(35) - விஜயசாந்தி (32) தம்பதி. இவர்களுக்கு கோகுல் குரு (8) மற்றும் ஜெயபிரதாப் (6) ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், முத்துச்செல்வம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் மங்கலத்தை அடுத்த கோம்பை காட்டுப்புதூர் பகுதியில் நண்பர்களுடன் அறையில் தங்கி இருந்து சென்ட்ரிங் வேலை செய்து வந்துள்ளார்.

இதனிடையே இன்று அதிகாலை 4 மணியளவில் முத்துச்செல்வம் அறையில் இருந்து வெளியே சென்ற நிலையில், வெகு நேரமாகியும் அறைக்கு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் முத்துச்செல்வம் செல்போனில் இருந்து முத்துச் செல்வத்தின் மனைவி விஜயசாந்திக்கு செல்போன் மூலமாக அழைத்தவர்கள் உங்கள் கணவர் அதிகாலை நேரத்தில் சுற்றித் திரிந்ததால் நாங்கள் பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறோம் என தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து அவரது நண்பர்களுக்கு அழைத்து முத்து செல்வத்தின் மனைவி இதுகுறித்து கூறியுள்ளார். இதையடுத்து அவரது நண்பர்கள் மங்களம் காவல் நிலையம் சென்று விசாரித்த போது அதுபோன்று இங்கு யாரையும் அழைத்து வரவில்லை எனக் கூறியதாக தெரிகிறது.

பின்னர் கோம்பை காட்டுப்புதூர் பகுதியில் உள்ள விசைத்தறி குடோனில் முத்துச்செல்வம் இருப்பதாக தகவல் வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்று அவரது நண்பர்கள் பார்த்த போது முத்துச்செல்வம் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

மயங்கிய நிலையில் இருந்த முத்து செல்வத்தை ஆம்புலன்ஸ் மூலம் சோமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் இதுபற்றி தகவலறிந்து வந்த மங்கலம் போலீசார் முத்துச் செல்வத்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த முத்து செல்வத்தின் உறவினர்கள் விசைத்தறி குடோன் முன்பு குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

பின்னர் பல்லடம் டி.எஸ்.பி செளமியா மற்றும் மங்கலம் போலீசார் அங்கு வந்து அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் முத்துச்செல்வம் அதிகாலை நேரத்தில் விசைத்தறி குடோன் அருகே நடந்து சென்றதாகவும் இதனால் சந்தேகமடைந்த உரிமையாளர் துரை பழனிச்சாமி உட்பட தொழிலாளர்கள் முத்துச்செல்வத்தை தாக்கியதில் உயிரிழந்ததாக தெரியவந்தது.

பின்னர் முத்து செல்வத்தின் உறவினர்கள் கோம்பை காட்டுப்புதூர் பகுதியில் முத்து செல்வத்தின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையென்றால், முத்துச் செல்வத்தின் சடலத்தை வாங்க மாட்டோம் எனக்கூறி அன்னூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், பல்லடம் டி.எஸ்.பி மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து துரை பழனிச்சாமி, சௌந்தரராஜன் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...