பல்லடம் அரசு மருத்துவமனை வாயிலில் உள்ள கான்கிரீட் மேட்டின் மீது ஏற முடியாமல் திணறிய கலெக்டர் கார் - இனியாவது சரி செய்வார்களா..? மக்கள் கேள்வி

பல்லடம் அரசு மருத்துவமனை நுழைவாயிலில் உள்ள கான்கிரீட் மேட்டின் மீது ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வந்த நிலையில் இன்று கலெக்டர் வாகனமும் ஏற முடியாமல் திணறியது குறிப்பிடத்தக்கது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி பூங்கா மற்றும் அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள காத்திருப்போர் அறை ஆகியவற்றின் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் மற்றும் அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

நகராட்சி பூங்கா திறப்பு விழா முடிந்த பின்னர், அமைச்சர் மற்றும் ஆட்சியர் உள்ளிட்டோரின் வாகனங்கள் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அணிவகுத்தன. அப்போது, முன்னால் சென்ற தாசில்தார், நகராட்சி கமிஷனர் மற்றும் பொறியாளர் உள்ளிட்டோரின் வாகனங்கள் அரசு மருத்துவமனை பிரதான நுழைவாயில் வழியாக சென்றன.

தொடர்ந்து வந்த ஆட்சியரின் கார் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சிலாப் மீது ஏற முடியாமல் ரிவர்ஸ் சென்றது.



இதையடுத்து, ரோட்டிலேயே இறங்கிய ஆட்சியர் வினீத், அரசு மருத்துவமனைக்குக்குள் நடந்து சென்றார். அவரது காரை தொடர்ந்து வந்த அமைச்சர் மற்றும் பாதுகாப்பு போலீசாரின் வாகனங்கள் மாற்று வழித்தடம் வழியாக அழைத்துச் செல்லப்பட்டன.



அரசு மருத்துவமனை நுழைவாயிலில் உள்ள சிமெண்ட் சிலாபுக்கும் ரோட்டுக்கும் இடையே ஏறத்தாழ ஒன்றை அடி உயரம் வித்தியாசம் உள்ளதால், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள், வயதான நோயாளிகள் மருத்துவமனைக்குள் செல்ல தொடர்ந்து தடுமாறி வருகின்றனர். சில, வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளது.

இது குறித்து வாகன ஓட்டிகள் நோயாளிகள், பொதுமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. யார் இதை சரி செய்ய வேண்டும் - நெடுஞ்சாலை துறையா? அல்லது நகராட்சியா.? என்பதில் நீயா நானா போட்டி ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

நீண்ட நாட்களாக அரசு மருத்துவமனை நுழைவாயிலில் உள்ள பிரச்சனையில் இன்று ஆட்சியரின் வாகனமும் தடுமாறியுள்ளதால், இனியாவது அந்த மேடு சரி செய்யப்படுமா..? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...