வரும் பொங்கலுக்குள் 4 வது குடிநீர் திட்ட பணிகள் முடிவடைந்து விடும் - திருப்பூர் மேயர்

நான்காவது குடிநீர் திட்ட பணி சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும், இதன் மூலம் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு குடிநீர் கிடைத்திடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாமன்ற கூட்டத்தில் மேயர் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.



இதில், துணை மேயர், மாநகராட்சி ஆணையாளர், மண்டல உதவி ஆணையாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் பேசிய மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், திருப்பூர் மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நடைபெற்று வரும் நான்காவது குடிநீர் திட்ட பணிகள் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும், பொங்கல் திருநாளுக்கு முன்னதாகவே நான்காவது குடிநீர் திட்டம் மூலமாக திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு குடிநீர் கிடைத்திடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், படிப்படியாக திருப்பூர் மாநகராட்சி முழுவதும் குடிநீர் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அதேபோல, திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சாலைகளும் மார்ச் மாதத்திற்குள் சரி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்கள் தங்களது வார்டு பகுதிகளில் நிலவும் பிரச்சனைகள் குறித்து மாநகராட்சி கவனத்திற்கு கொண்டு சென்றனர். மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும், பாகுபாடு இல்லாமல் அடிப்படை பிரச்சினைகள் மேம்படுத்தி தரப்படும் என மாநகராட்சி மேயர் தெரிவித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...