பிரதமர் மோடியின் தாயார் மறைவு: கோவை பாஜகவினர் தீபங்கள் ஏற்றி அஞ்சலி..!

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கோவை மாவட்ட பாஜகவின் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மற்றும் பாஜகவினர் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.


கோவை: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் இன்று உடல்நலம் குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கோவை மாவட்ட பாஜகவின் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.



இதில், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மற்றும் பாஜகவினர் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.



இந்த அஞ்சலி நிகழ்விற்காக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அம்மன்குளம் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்ற மாற்றுத்திறனாளி பிரதமர் மோடியின் தாயார் படத்தை ஓவியமாக வரைந்திருந்தார்.



அந்த ஓவியத்தை சுற்றிலும் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், பிரதமர் மோடியின் தாயார் 100வது வயதில் இறந்துள்ளார். அவரது இறப்பிற்கு, பாஜக மகளிர் அணி சார்பாக பிரதமர் மோடி மற்றும் அவர்களது உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.

பிரதமரின் தாயார் கடுமையான வாழ்க்கை பின்னணிகளை சந்தித்து, எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து உன்னத தலைவரை நாட்டிற்காக கொடுத்து மிகப்பெரிய உத்வேகத்தை அவருக்கு அளித்து தவ வாழ்க்கையை வாழ்ந்துள்ளதாக, தெரிவித்தார்.

மேலும், இந்திய பெண்கள் அனைவரும் எளிமையான வாழ்க்கை வாழ்வதற்கு, இவரது வாழ்க்கை உத்வேகமாக உள்ளது எனவும் ஏழ்மை நிலையில் இருக்கக்கூடிய பெண்களுக்கு தங்களுடைய வாழ்க்கை மூலமாக உயர்ந்த தலைவர்களை தவப்புதல்வர்களை கொடுக்க முடியும் என்பதற்கான உதாரணமாக இவரது வாழ்க்கையை பார்ப்பதாக தெரிவித்தார்.

மேலும், இரங்கல் தெரிவித்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் சமூக தலைவர்களுக்கும் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார்.



சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி சங்கர் என்பவர் வரைந்த பிரதமரின் தாயார் ஓவியம் குறித்து பேசிய அவர், தெற்கு தொகுதியில் மாற்றுத்திறனாளிகள் குறித்து தெரிந்து கொள்வதற்காக அணுகிய பொழுது அவரைப் பற்றி தெரிந்து கொண்டேன், பிரதமரின் தாயார் ஓவியத்தை வரைந்த அவருக்கு தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Newsletter

Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day

The Tamil Nadu Police Museum in Coimbatore will offer free entry to the public and school and college students on Septem...

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...