கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோவை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட எழுத்தர் விஜயகுமாருக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதியரசர் சரவணபாபு உத்தரவிட்டார்.
கோவை: கோவை வேளாண்மை பல்கலைகழக வளாகத்தில் செயல்பட்டு வந்த பொதுப்பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் கடந்த 1987 - 1993 காலகட்டத்தில் செயலராக பணியாற்றி வந்த நாகராஜ், எழுத்தர் விஜயகுமார் உள்ளிட்ட மூன்று பேர் சங்க உறுப்பினர்கள் செலுத்திய தொகையில் ரூ.20 ஆயிரம் கையாடல் செய்தனர்.
இது குறித்து கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் சுந்தரம் வணிக குற்றப்பிரவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், கடந்த 1995 ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 2001 ஆம் ஆண்டு விசாரணை துவங்கியது. விசாரணைக்கு பின்னர், இந்த வழக்கில் இருந்து ஒருவர் விடுவிக்கப்பட்டார்.
மேலும், வழக்கில் தொடர்புடைய கூட்டுறவு செயலாளர் நாகராஜ் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோவை ஜே.எம்.4 நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதில், அரசு தரப்பில் பிரசன்ன வெங்கடேஷ் ஆஜரானார்.
இன்று இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட எழுத்தர் விஜயகுமாருக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதியரசர் சரவண பாபு உத்தரவிட்டார். மேலும், விஜயகுமார் மேல்முறையீடு செய்யவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.