ஆளுங்கட்சியை சார்ந்தவர்களுக்கு மட்டும் வீட்டு மனை பட்டா - கோவை வெள்ளலூரில் வீட்டுமனை பட்டா கோரி பெண்கள் சாலை மறியல்…!

ஆளுங்கட்சியை சேர்ந்த நபர் மூலம் 56 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டிய பெண்கள் வெள்ளலூர் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் வெள்ளலூர் வள்ளியம்மைபுரம் பகுதியை சேர்ந்த சுமார் 86 குடும்பத்தினர் இலவச வீட்டுமனை பட்டா வழங்கிக் கோரி விண்ணப்பித்திருந்தனர்.



இந்நிலையில், விண்ணப்பித்திருந்த 86 மனுக்களில், 56 நபர்களுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது என்றும் விண்ணப்பித்த மீதி 30 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை என்று கூறி வெள்ளலூர் பேருந்து நிறுத்தம் அருகே பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து பேசிய பெண்கள், ஆளுங்கட்சியை சேர்ந்த நபர் மூலம் 56 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களுடன் விண்ணப்பித்த எங்களுக்கு பட்டா வழங்கவில்லை, எனவே, விண்ணபித்த தங்களுக்கும் வீட்டுமனை பட்டா உடனடியாக வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து அங்கு வந்த போத்தனூர் போலீசார் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.



பட்டா வேண்டி பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு ஈடுபட்டதால் வெள்ளலூர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...